தமன்னாவின் கார்ஜியஸ் போட்டோஷூட் புகைப்படங்கள்!
தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானார் தமன்னா. ஆனால் அவருக்கான கவனிப்பு என்பது கல்லூரி மற்றும் அயன் ஆகிய படங்களின் மூலம்தான் கிடைத்தது. அதையடுத்து வரிசையாக முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து டாப் நடிகையானார்.
ஆனால் ஒரு கட்டத்தில் புது நாயகிகளின் வரவுக்கு பிறகு தமன்னாவின் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இப்போது சினிமாவில் 18 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் பாலிவுட் பட வாய்ப்புகள் அவருக்கு அதிகமாக வர ஆரம்பித்துள்ளன. பாலிவுட்டில் அடுத்தடுத்து ஜி கர்தா மற்றும் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 ஆகியவற்றில் நடித்துள்ளார். இந்த இரு படங்களிலும் அவர் முத்தக் காட்சிகள் மற்றும் படுக்கையறைக் காட்சிகளில் நடித்திருந்தார்.
இப்போது பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவோடு காதலில் உள்ள தமன்னாவின் கருப்பு நிற சேலை அணிந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.