1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Rajini asked Nelson to start jailer 2 works

ஜெயிலர் 2 வுக்கு சிக்னல் கொடுத்த ரஜினி… வேலைகளை தொடங்கும் நெல்சன்!

#Kaavaalaa
கடந்த ஆகஸ்ட் மாதம் ரஜினிகாந்த், மோகன் லால், சிவராஜ் குமார், விநாயகன் மற்றும் தமன்னா ஆகியோர் நடித்த ஜெயிலர் படம் ரிலீஸாகி பெருவெற்றி பெற்றது. படத்தின் விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும், வசூலில் கலக்கி 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது.

இந்த வெற்றி நீண்டகாலமாக தோல்விகளை கொடுத்துக் கொண்டிருந்த ரஜினிக்கு புத்துணர்ச்சியாக அமைந்தது. இதையடுத்து இப்போது அவர் லால் சலாம், மற்றும் ஞானவேல் இயக்கும் படம்  ஆகியவற்றில் நடித்துக் கொண்டு இருக்கிறார். அடுத்து லோகேஷ் இயக்கும் ‘தலைவர் 171’ படத்தில் நடிக்க உள்ளார்.

இதையடுத்து அவர் நெல்சன் இயக்கத்தில் மீண்டும் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இப்போது இது சம்மந்தமாக அவர் இயக்குனர் நெல்சனிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதற்கான வேலைகளை தொடங்க சொல்லியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்த கட்டுரையில்
சென்னையில் இன்று தொடங்குகிறது கங்குவா படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங்!