புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 12 ஜனவரி 2022 (15:50 IST)

சமந்தா போல ஒரு பாடலுக்கு நடனமாடும் தமன்னா!

நடிகை சமந்தா போல பிரபல ஹீரோவின் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாவுள்ளார் தமன்னா.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை சமந்தா. இவர் தற்போது  விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி – நயன்தாரா உடன் இணைந்து நடித்து வருகிறார்.

இதற்கிடையே, நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் ஓ சொல்றியா என்ற பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். இதற்கு விமர்சனங்கள் எழுந்தாலும் இப்பாடல் ஹிட் ஆனது.

இ ந் நிலையில் முன்னணி நடிகை சமந்தா போல நடிகை தமன்னாவும்   நடிகர் வருண் தேஜ் ஹீரோவாக நடிக்கும் 'கனி' என்ற படத்தில் ஒரு பாடலுக்கு  நடனமாடியுள்ளார். இப்பாடல் வரும் 15 ஆம் தேதி காலை 11;08 க்கு ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.