செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 7 ஜனவரி 2022 (14:58 IST)

இன்று மாலை வெளியாகிறது புஷ்பாவின் சர்ச்சை பாடல்…காத்திருக்கும் இளைஞர்கள்!

புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது.

புஷ்பா படத்தின் முக்கிய கவர்ச்சியாக அமைந்தது சமந்தா நடனமாடிய ஊ சொல்றியா மாமா. விவாகரத்துக்கு பின் மிகவும் கவர்ச்சியான நடனத்தை இந்த பாடலில் சமந்தா ஆடியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல் அந்த பாடலின் வரிகள் ஆண்களைக் கொச்சைப் படுத்தும் விதமாக இருப்பதாக வழக்கும் தொடரப்பட்டது.

இந்நிலையில் படம் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் அந்த பாடலுக்கு திரையில் ரசிகர்கள் கொண்டாடி நடனமாடினர். இந்நிலையில் அந்த பாடலின் வீடியோ இன்று மாலை இணையத்தில் வெளியாக உள்ளது.