செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 3 ஜூலை 2023 (18:16 IST)

''விஜய் 68'' படத்திற்குப் பின் நடிப்புக்கு ஓய்வா? விஜய் தரப்பில் முக்கிய தகவல்

விஜய் 68 படத்திற்குப் பின் சினிமாவில்   நடிப்புக்கு இடைவெளி விடுவது தொடர்பாக வெளியான செய்திக்கு விஜய் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

சமீபத்தில் நடிகர் விஜய்  தமிழகம் முழுவதும் பிளஸ் 2 , 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை பெற்றோருடன் அழைத்து, கல்வி விழா நடத்தி அவர்களுக்கு விருந்து வைத்து சான்றிதழ் மற்றும் உதவித் தொகை வழங்கினார்.

இது அவரது அரசியல் வருகையின் ஆரம்பம் என்ற தகவல் வெளியானது. எனவே இது தமிழகத்தில் முக்கிய பேசு பொருளாக மாறியது. திமுக, அதிமுக, விசிக, அமமுக உள்ளிட்ட பல கட்சித் தலைவர்களும் விஜய்யின் அரசியல் வருகை பற்றி கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில்  இன்று காலையில் ஒரு தகவல் வெளியானது. அதன்படி,  நடிகர் விஜய், அடுத்து நடிக்கவுள்ள விஜய் 68  படத்திற்குப் பிறகு சினிமாவுக்கு 3  ஆண்டுகள் இடைவெளி விடப்போவதாகவும், 2026 சட்டமன்ற தேர்தலைக் கணக்கில் கொண்டு அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், விஜய் 68 படத்திற்குப் பின் சினிமாவில்   நடிப்புக்கு இடைவெளி விடுவது தொடர்பாக  வெளியான செய்திக்கு விஜய் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

இதனால், விஜய் தொடர்ந்து நடிக்கவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.