புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (19:30 IST)

எஸ்பிபி குரலை கொரோனா குரல்வளையை பிடித்து எடுத்து கொண்டு போய்விட்டது: டி ராஜேந்தர்

நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், டி ராஜேந்தர் அவர்கள் எஸ்பிபி குறித்து வீடியோ ஒன்றில் கண்ணீருடன் கூறியதாவது: நான் இசையமைத்த எத்தனையோ பாடல்களுக்கு உயிர் கொடுத்த எஸ்பிபி அவர்கள் மறைந்துவிட்டார் என்று நினைக்கும்போது மிகவும் வருத்தமாக உள்ளது. 
 
அவருடைய இழப்பு இசையுலகிற்கே ஒரு பேரிழப்பு. அவருடைய குரலை கொரோனா என்ற அரக்கன் குரல்வளையை பிடித்து எடுத்து கொண்டு போய்விட்டது. பாலில் தேன் கலந்தது போன்ற அவரது குரல் பார் இருக்கும் வரை நிலைத்திருக்கும். 
 
அவருடைய உடல் வேண்டுமானால் மறையலாம், ஆனால் அவரது குரல் எப்போதும் இருக்கும். அவருடைய குடும்பத்தினர்களூக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்’ என்று டிராஜேந்தர் கூறியுள்ளார்.