திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 7 டிசம்பர் 2022 (10:22 IST)

“சிம்புவுக்கு வரும் பெண் எப்படி இருக்கவேண்டும்…” டி ராஜேந்தர் தகவல்!

நயன்தாரா மற்றும் ஹன்சிகா ஆகியோர்களுடன் நடிகர் சிம்பு காதல் என்றும் அதன்பின் இருவருடனும் பிரேக் அப் ஆகிவிட்டது என்றும் கோலிவுட் திரையுலகில் கிசுகிசுக்கள் வந்தன என்பது அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமின்றி பல நடிகைகளுடன் சிம்பு கிசுகிசுக்கப்பட்டார் என்பதும் அவரது திருமண செய்தி ஒரு சில மாதங்களுக்கு ஒரு முறை சமூக வலைதளங்களில் வைரலாகும் என்பதும் வழக்கமான ஒன்று.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக லண்டனைச் சேர்ந்த பெண் ஒருவரை சிம்பு திருமணம் செய்ய இருப்பதாகவும் அந்தப் பெண் சிம்புவின் தூரத்து உறவினர் என்றும் கொரோனா வைரஸ் தாக்கம் முடிந்தவுடன் இருவருக்கும் லண்டனில் திருமணம் நடக்க இருப்பதாகவும் ஒரு சில இணையதளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் செய்திகள் வெளியானது .

இந்நிலையில் தற்போது காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு கோயிலில் வழிபட்ட இயக்குனர் டி ராஜேந்தர் செய்தியாளர்களிடம் பேசிய போது “எங்கள் மருமகள் எனக்கோ, என் மனைவிக்கோ பிடித்தவராக இருக்கவேண்டும் என்பதில்லை. மகன் சிலம்பரசனுக்கு பிடிக்கவேண்டும். எங்கள் மருமகளை தேர்வு செய்யும் பொறுப்பை அந்த கடவுளிடமே விட்டு விடுகிறேன்” எனக் கூறியுள்ளார்.