பெரிய படத்தை வாங்குவாங்க; சின்ன படத்தை வாங்குவாங்களா? – டி.ராஜேந்தர் கேள்வி!
தமிழ் சினிமாக்களை திரையரங்கில் திரையிடுவதற்கு முன் ஓடிடியில் வெளியிட கூடாது என கோரிக்கை முன்வைத்து டி.ராஜேந்தர் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில் தமிழ் திரைப்படங்கள் பலவற்றை ஓடிடிக்கு தயாரிப்பாளர்கள் விற்பது விநியோகஸ்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழ் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் நடத்திய கூட்டத்தில் அதன் தலைவர் டி.ராஜேந்தர் தலைமையில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காணொளி வாயிலாக நடைபெற்ற சந்திப்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் பெரிய ஸ்டார் அந்தஸ்து உள்ள படங்களை ஓடிடி தளங்கள் வாங்கும், ஆனால் சிறிய பட்ஜெட் படங்களை வாங்குவார்களா? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மேலும் சின்ன பட்ஜெட் படங்களையும் பல விரியோகஸ்தர்கள் வாங்கி வெளியிடுவதாகவும், திரையரங்க கட்டணத்தில் விதிக்கப்படும் 8 சதவீத உள்ளாட்சி வரியை ரத்து செய்யவும் அதில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த பிரச்சினை குறித்து பேசிய டி.ராஜேந்தர் ஓடிடி தளங்களில் படங்களை வெளியிட்டால் விநியோகஸ்தர் என்ற இனமே அழிந்து விடும் என கூறியுள்ளார்.