வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 15 ஜூன் 2020 (10:24 IST)

இது தற்கொலை அல்ல கொலை - சுஷாந்த் சிங் மரணம் குறித்து பப்பு யாதவ் பரபரப்பு பேட்டி!

பிரபல பாலிவுட் நடிகரும் எம்எஸ் தோனி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்தவருமான நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் திடீரென நேற்று தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

அவரது மரண செய்தியை தற்போது வரை யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியவைல்லை. அவ்வளவு அழகும், நடிப்பு திறமையும் , இளகிய மனமும் கொண்ட சுஷாந்த் சிங்கின் ஒவ்வொரு நினைவுகளும் சமூகவலைத்தளங்களில் வெளியாகி இன்னும் இன்னும் அவரை நேசிக்கத்தான் வைக்கிறது.

கடந்த 8ஆம் தேதி சுஷாந்த் சிங்கின் முன்னாள் மேலாளர் திஷா ஷலியன் 14-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார் அதுமுதலே மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த சுஷாந்த் அதன் பிறகே தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.

இந்த நிலையில், சுஷாந்தின் மாமா ( சகோதரியின் கணவர்) ஓ.பி சிங், சுஷாந்தின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்து தீவிர விசாரணை வேண்டும் என்று கூறியுள்ளார். ஓ.பி சிங் ஹரியானா மாநில காவல்துறையில் ஏ.டி.ஜி.பி ஆக பணியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஜன் அதிகார் கட்சி தலைவர் பப்பு யாதவ் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்,  சுஷாந்த் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.