செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 27 ஜூன் 2022 (14:41 IST)

25 YEARS OF சூர்யவம்சம்… 90ஸ் கிட்ஸ்களின் எவர்க்ரீன் பேவரைட்… சரத்குமாரிம் நாஸ்டால்ஜியா பதிவு

சூர்யவம்சம் திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் படத்தைப் பற்றிய தருணங்களைப் பதிவு செய்துள்ளார் நடிகர் சரத்குமார்.

தமிழ் சினிமாவின் கமர்ஷியல் வெற்றி பெற்ற படங்களில் ‘சூர்யவம்சம்’ திரைப்படத்துக்கு முக்கிய இடம் உண்டு. சரத்குமாரை ஒரு மிகப்பெரிய ஸ்டார் நடிகர் ஆக்கியதில் இந்த படத்துக்கு பெரும்பங்கு உண்டு. 1997 ஆம் ஆண்டு இதே நாளில் ரிலீஸான இந்த திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் சூப்பர் ஹிட் ஆனது. திரையரங்கில் அதிக ரசிகர்களால் பார்க்கப்பட்ட படம் என்ற சாதனையைப் படைத்தது. இன்றளவும் தொலைக்காட்சி, யுட்யூப் என ரசிகர்களால் தொடர்ந்து பார்க்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து நடிகர் சரத்குமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் சூர்யவம்சம் படம் பற்றிய தன்னுடைய மலரும் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.