சூர்யாவின் அடுத்த படம் வாடிவாசல் இல்லையாம்… குறுக்கே புகுந்த குடும்ப இயக்குனர்!
சூர்யா அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் குடும்ப கதை ஒன்றில் நடிக்க உள்ளாராம்.
சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் பல சர்ச்சைகளுக்குப் பிறகு அடுத்த மாதம் ஓடிடியில் ரிலிஸ் ஆக உள்ளது. இந்நிலையில் அடுத்து அவர் வெற்றி மாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது.
ஆனால் இப்போது சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க டி இமான் இயக்க உள்ளாராம். இதனால் வெற்றிமாறனும் சூரி நடிக்கும் படத்தை இயக்கும் முனைப்பில் இருக்கிறாராம். இரண்டு பேருமே குறுகிய காலத்தில் தங்கள் படங்களை முடித்துவிட்டு வாடிவாசல் படத்தை ஆரம்பிக்க போகிறார்களாம்.