அஜித், விஜய், சூர்யாவின் அடுத்த படங்கள் குறித்து ஜிவி பிரகாஷ்!

gv prakashkumar
அஜித், விஜய், சூர்யாவின் அடுத்த படங்கள் குறித்து ஜிவி பிரகாஷ்!
siva| Last Modified திங்கள், 21 செப்டம்பர் 2020 (17:29 IST)
பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த போது அதில் அஜித், விஜய், சூர்யா குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்

அஜீத் நடித்த கிரீடம் படம் தான் இசையமைத்த இரண்டாவது படம் என்றும் அதற்கு முன்னர் வெயில் என்ற ஒரே ஒரு படம் மட்டுமே இசை அமைத்திருந்த தனக்கு இரண்டாவது பட வாய்ப்பு கொடுத்தது பெரிய விஷயம் என்றும் அவர் ஒரு அற்புதமான மனிதர் என்றும் கூறியுள்ளார்

மேலும் சுதா கொங்காரா மற்றும் அஜித் இணையும் படம் நிச்சயம் உருவாகும் என்றும் அந்த படத்திற்கு நான் தான் இசையமைக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்

மேலும் விஜய் குறித்து அவர் கூறியபோது ’விஜய்-வெற்றிமாறன் இணையும் திரைப்படம் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் இந்த திரைக்கதை தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவராத என்றும் அட்டகாசமாக இருக்கும் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் கதையம்சம் கொண்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் சூர்யாவின் ‘வாடிவாசல் திரைப்படம் குறித்து அவர் கூறியபோது இந்த திரைப்படத்தில் ஜல்லிக்கட்டு பின்னணி இசையமைக்க இருப்பதாகவும் மிக அருமையான திரைக்கதை என்றும் இந்த படம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வித்தியாசமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்

அஜித் விஜய் சூர்யா குறித்து ஜிவி பிரகாஷ் கூறிய இந்த கருத்துக்கள் தற்போது வைரலாகி வருகிறது


இதில் மேலும் படிக்கவும் :