ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 25 பிப்ரவரி 2024 (11:33 IST)

தமிழகத்தின் மூன்று முக்கிய நகரங்களில் ஷூட்டிங்… தயாரான சுதா கொங்கரா சூர்யா படக்குழு!

நடிகர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தையும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்க உள்ளது.இந்த படத்தின் டைட்டில் ப்ரமோஷன் வீடியோ கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி கவனம் பெற்றது.

படத்தின் ப்ரமோஷன் வீடியோவில் புறநானூறு என்ற டைட்டில் இடம்பெற்றிருந்தது. இந்த படத்தில் துல்கர் சல்மான் மற்றும் நஸ்ரியா ஆகிய இருவரும் நடிக்க உள்ளனர். இந்த படம் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்காக மதுரை, திருச்சி மற்றும் சிதம்பரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் ஷுட்டிங் நடத்த திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.