வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 24 ஜூலை 2021 (10:05 IST)

எதற்கும் துணிந்தவன் அப்டேட்… 5 கெட்டப்களில் சென்ஸிடிவ் பிரச்சனையில் இறங்கும் சூர்யா!

சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படத்தில் பொள்ளாச்சி பாலியல் சம்பவம் பற்றிய கதை என சொல்லப்படுகிறது.

சூர்யாவின் 40 ஆவது படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க டி இமான் இசையமைக்க உள்ளர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க முக்கியமானக் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் முதல் லுக் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியானது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தைப் பற்றிய மற்றொரு அப்டேட் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் சில ஆண்டுகளுக்கு முன்னர் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களைப் பற்றிய கதை என சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தில் சூர்யா  5 கெட்டப்களில் வர உள்ளதாக சொல்லப்படுகிறது.