'தானா சேர்ந்த கூட்டம்' பீலா பீலா பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியது.
இந்த நிலையில் நாளை இரவு 7 மணிக்கு இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான 'பீலா பீலா' என்ற பாடல் வெளியாகவுள்ளது. இந்த தகவலை சற்றுமுன்னர் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்
மேலும் இந்த படத்தின் பாடல்கள் ரிலீஸ் விழா குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும், அன்றைய தினமே இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சூர்யா, சூர்யா, கீர்த்திசுரேஷ், செந்தில், சரண்யா பொன்வண்ணன், ரம்யா கிருஷ்ணன், கோவை சரளா, கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த்ராஜ், ஆர்ஜே பாலாஜி, சுரேஷ்மேனன், தம்பி ராமையா மற்றும் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தை 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இளம் இசைப்புயல் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.