பொதுவெளியில் ஸ்க்ரீன் கட்டி திரையிடப்பட்ட ‘ஜெய்பீம்’
பொதுவெளியில் ஸ்க்ரீன் கட்டி ஜெய்பீம் திரைப்படம் திரையிடப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்திற்கு பொதுமக்கள் ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
ஒடுக்கப்பட்ட மக்களாக இருளர் இனத்தைச் சேர்ந்தவர்கள் காவல்துறையினரால் அடைந்த துன்பம் குறித்து வெட்டவெளிச்சமாக இந்த படம் எடுத்துக் காட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தமிழகத்தில் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும் ஜெய்பீம் படம் சக்கை போடு போட்டு வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்கள் இருக்கும் பகுதியில் ஜெய்பீம் திரைப்படம் பொதுவெளியில் ஸ்கிரீன் கட்டி திரையிடப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது