செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 29 நவம்பர் 2021 (16:32 IST)

அஜித் பட ரீமேக் விவகாரம்! போனி கபூருக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் எஸ்.ஜே.சூர்யா!

அஜித் படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் விவகாரத்தில் போனி கபூர் மீது எஸ்,ஜே.சூர்யா மேல்முறையீடு செய்ய உள்ளார்.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் வலிமை. இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். மேலும் போனி கபூர் 1999ம் ஆண்டு தமிழில் வெளியான அஜித் நடித்த வாலி படத்தை இந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்கான ரீமேக் உரிமையை வாலி பட தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தியிடம் அவர் வாங்கியுள்ளார்.

இந்நிலையில் வாலி படத்தின் இயக்குனரான எஸ்.ஜே.சூர்யா தனது அனுமதி இல்லாமல் படத்தை ரீமேக் செய்யக்கூடாது என வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் போனி கபூர் படம் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக எஸ்.ஜே.சூர்யா தரப்பில் கூறப்பட்டுள்ளது.