புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: செவ்வாய், 14 ஜூலை 2020 (19:55 IST)

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் சூர்யா... ரசிகர்கள் உற்சாகம்...

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா.   இவர் தனது சொந்த தயாரிப்பான 2டி எண்டர்டெயிமெண்ட் சார்பில் சூரரைப் போற்று என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அடுத்து இவர் என்னப் படத்தில் நடிக்கவுள்ளார் என்பது பற்றி அவரது ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர்.

இந்நிலையில் அவர் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ஒரு வெப் சீரிஸிஒல் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

மேலும், ஹரி இயக்கத்தில் சூர்யா ஒப்பந்தமாகியுள்ள  அருவா படத்தின் சூட்டிங் கொரொன காலத்தால் தமதமாகும் என்பதால் இதற்கிடையே ஒரு வெப்சீரீசில் நடித்து அதற்கு வாங்கவுள்ள சம்பளத்தை அனாதை இல்லத்திற்கு அவர் வழங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது. இந்த வெ சீரிஸ் 9 எபிசோட்களைக் கொண்டதாகவும் அதில் ஒவ்வொன்றையும் ஒரு இயக்குநர் இயக்கவுள்ளதாகவும் அவர்களில் ஒருவர் இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர் மணிரத்னம் என்று கூறப்படுகிறது.