’’அவர்கள் இருவரும் ’’பேசுவதால் எனக்கு மன உளைச்சல்…வனிதா கண்ணீர் பேட்டி
தமிழ் சினிமாவில் சீனியர் குணச்சித்திர நடிகர் விஜய்குமாரின் மகள் வனிதா. இவர் சமீபத்தில் இயக்குநர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் இவரது திருமணம் குறித்து பலரும் பலவித விமர்சனங்களை முன்வைத்தனர். இவற்றிற்கு வனிதா தனது யூடியுப் பக்கத்தில் விளக்கம் அளித்து வந்த நிலையில் இன்று தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி விமர்சிப்பதால் தான் மிகுந்த ம்ன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஏற்கனவே சென்னை போரூர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்த வனிதா இன்று தனது வழக்கறிஞருடன் வந்து அது சம்பந்தமான ஆவணங்களை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :
சூர்யா தேவி என்ற பெண்ணும் படத்தயாரிப்பாளர் ரவீந்தரனும் என்னைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறி பரப்பி வருகின்றனர்.
இவர்கள் இருவரும் பணம் சம்பாதிப்பதற்காக என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்து வருகின்றனர் என்று கண்ணீருடன் தெரிவித்தார். இதையடுத்து பேசிய வனிதாவின் வழக்கறிஞர் செரிதர் சூர்யா தேவி யைப் பற்றி போலீஸாரிடம் ஆதாரம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நடிகை வனிதா கண்ணீருடன் பேட்டியளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.