மும்பைக்கு குடிபெயர்ந்தது இதற்காகதான்… சூர்யா சொன்ன காரணம்!
சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாக உள்ளது கங்குவா திரைப்படம். இந்த படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார். இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் பாபி தியோல், திஷா பதானி, கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் நடிக்க, வெற்றி ஒளிப்பதிவு மேற்கொள்ள, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.படம் 10 மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் ரிலீஸ் நவம்பர் 14 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்காக வட இந்திய ஊடகங்களில் சூர்யா அதிகளவில் நேர்காணல்கள் கொடுத்து வருகிறார்.
அதில் தான் இப்போது மும்பைக்கு குடியேறியுள்ளேன் என்பது குறித்து பேசியுள்ளார். அதில் “ஜோதிகா தன்னுடைய 18 ஆவது வயதில் மும்பையில் இருந்து சென்னை வந்தார். எங்களுக்குத் திருமணம் ஆனதும் என்னுடனேயே தங்கிவிட்டார். அவர் மும்பையில் இருந்து வந்து 27 ஆண்டுகள் ஆகின்றன. அவரின் நண்பர்கள் பெற்றோர்கள் அங்கு உள்ளனர். எனக்கான ஏன் அவர் தன்னுடைய பெற்றோருடன் இருக்க வேண்டிய நேரத்தை இழக்க வேண்டும். ஏன் ஒரு ஆண் எப்போதும் எடுத்துக் கொள்ளும் இடத்திலேயே இருக்கவேண்டும். இதையெல்லாம் யோசித்துதான் நாங்கள் இப்போது மும்பைக்கு குடியேறியுள்ளோம்” எனக் கூறியுள்ளார்.