செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 24 ஜனவரி 2023 (21:56 IST)

''அறுவை சிகிச்சை முடிந்தது''- மருத்துவமனையில் இருந்து விஜய் ஆண்டனி டுவீட்

சில ஆண்டுகளுக்கு முன் வெளியானன் படம் பிச்சைக்காரன். இப்படத்தை  இயக்குனர் சசி இயக்கியிருந்தார். இப்படத்திற்கு தயாரிப்பாளராகவும், இசையமைப்பாளராகவும் விஜய் ஆண்டனி பணியாற்றினார்.

இப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இதையடுத்து,  பிச்சைக்காரன்  இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் உள்ள லங்காவி  தீவில்   நடந்த  படப்பிடிப்பின்போது,  படகு விபத்தில் நடிகர் விஜய் ஆண்டனி காயமடைந்ததாகவும், அவர், கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அங்கிருந்து, சென்னை கொண்டு வரப்பட்டதாகத்  தகவல் வெளியானது.

இந்த நிலையில்,  நடிகர் விஜய் ஆண்டனி தன் டுவிட்டர் பக்கத்தில்,   ‘’அன்பு நண்பர்களே, பிச்சைக்காரன் 2 பட ஷூட்டிங், மலேசியாவில் நடனதுபோது ஏற்பட்ட விபத்தில், என் முகத் தாடை மற்றும் மூக்கில் அடிப்பட்ட காயங்களில் இருந்து பத்திரமாக மீண்டிருக்கிறேன்.நான் முக்கியமான சர்ஜரி முடிந்தது.  நான் விரைவில் உங்களுடன் பேசுகிறேன். உங்களுடைய  ஆதரவுக்கும்,  நலம் விசாரிக்கும் நன்றி ‘’எனத் தெரிவித்துள்ளார்.