வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 17 ஆகஸ்ட் 2024 (19:20 IST)

வணங்கான் படத்தின் ரிலீஸ் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி!

இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான வணங்கான் திரைப்படம் கிடப்பில் போடப்பட்ட நிலையில் அதன் பிறகு அந்த படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்தார். மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில், ரோஷினி ஹர்ப்ரியன், சமுத்திரக்கனி மற்றும் மிஷ்கின் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த  படத்தை இயக்குனர் பாலா மற்றும் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

படத்தின் போஸ்டரில் அருண் விஜய் ஒரு கையில் பெரியார் சிலையையும் மற்றொரு கையில் பிள்ளையார் சிலையையும் வைத்திருப்பது போல உருவாக்கப்பட்டிருந்தது. அது ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி நல்ல கவனத்தை ஈர்த்தது. வசனங்கள் இன்றி விறுவிறுப்பான காட்சிகளோடு உருவாக்கப்பட்டுள்ள இவையிரண்டும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன.

இந்த படம் ஆகஸ்ட் மாதமே ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்போது படம் சென்சார் செய்யப்பட்டு யு ஏ சான்றிதழ் பெற்றுள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார். படம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.