ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 31 ஜனவரி 2022 (16:25 IST)

நடிகர் அஜித்துடன் நடிக்கும் சூப்பர் ஸ்டார்...எகிறும் எதிர்பார்ப்பு

'அஜித் 61' படத்தில் சூப்பர் ஸ்டார்  மோகன்லால் உள்ளிட்ட 3 பிரபலங்கள் நடிக்க உள்ளதாகவும் இப்படம் பிரமாண்டமான தயாரிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

அஜித் ஹெச் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தை அடுத்து இருவரும் மீண்டும் மூன்றாவது முறையாக இணைகின்றனர். இந்த படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார். வலிமை ரிலீஸுக்கு பின் இதற்கான வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மார்ச் 2 ஆம் தேதி ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இப்போது படப்பிடிப்பு தொடங்குவது தாமதமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் 'ajith61' படத்தின் பூஜை போடப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தில் அஜித்துடன் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான மோகன் லால் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இதை உறுதிப்படுத்தும் வகையில், 'ajith61' படத்தில் நடிகர் அஜித்துடன் இணைந்து மோகன்லால், பிரகாஷ்ராஜ் மற்றும் தபு உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தை அடுத்து நடிககர் அஜித்துடன் இணைந்து தபு  நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.