திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 14 நவம்பர் 2020 (10:20 IST)

சூப்பர் ஸ்டார் ரஜினி தனது ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து…

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த். அவருக்கு உலகெங்கும் பல  கோடி ரசிகர்கள் உள்ளனர்.

அவர் தற்போது, அண்ணாத்த என்ற படத்தில் சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். அவருடன் கீர்த்தி சுரேஷ், மீனா உள்ளிட்ட நடிகைகளும் பிரபல நடிகைகளும் நடித்து வந்த நிலையில் கொரோனா கால ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் படப்பிடிப்பு மீண்டும் துவங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில், இன்று தீபாவளி என்பதால்  ரஜினியின் ரசிகர்கள் அவரது போயஸ் கார்டன் இல்லத்திற்கு முன் நின்று அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.

அப்போது அவரும் கை அசைத்து ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்தார்.