செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 6 ஜூலை 2022 (23:53 IST)

சூப்பர் ஸ்டார் பட நடிகை தனது மாமனார் மீது புகார்...

ranjana nachiyar
சூப்பர் ஸ்டார் பட  நடிகை தனது மாமனார் மீது புகாரளித்துள்ளார்.

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த துணை நடிகை ரஞ்சனா நாச்சியார்(38). இவர் சின்னத்திரையில் நடித்துப் புகழ்பெற்ற நிலையில் வெள்ளித்திரையில் நட்பே துணை, எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், ரஞ்சனா நாச்சியார் தன் மாமனார் சரவண வேல்(73) மற்றும் அவரது மனைவி ஆகியோர் தன்னை அடித்துக் கொடுமைப்படுத்துவதாக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுபற்றி  நடிகை ரஞ்சனா கூறியதாவது: என் கணவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவரை எனக்குத் திருமணம் செய்துவைத்து ஏமாற்றிவிட்டனர். என் கணவர் தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில், என் மாமனார் என்னை அடித்துக் கொடுமைப்படுத்துகிறார்.  இவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.