ரொம்ப தூரம் போயிட்டேன், ஃபுல்லா முடிக்காம வரமாட்டேன்: ‘ஜெயிலர்’ டிரைலர்..!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர்
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது
இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் மாஸ் காட்சிகள் விநாயகனின் வில்லத்தனமான காட்சிகள் அனிருத்தின் சூப்பரான பின்னணி இசை மற்றும் நெல்சன் பாணியில் ஆக்சன் மற்றும் காமெடி கலந்த காட்சிகள் ஆகியவை ஜெயிலர் திரைப்படத்தின் டிரைலரில் இடம் பெற்றுள்ளன.
மொத்தத்தில் ஒரு அதிரடி ஆக்சன் படம் இதுவரை இல்லாத வகையில் ரஜினி ரசிகர்களுக்கு இந்த படம் விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.