விஷால் படத்தில் ஒப்பந்தமான நடிகை… பல ஆண்டுகளுக்குப் பின் வாய்ப்பு!
நடிகை சுனைனா விஷாலின் அடுத்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
நடிகர் விஷால் நடிப்பில் எனிமி என்ற படம் முழுவதும் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது. அதையடுத்து அவர் நடிக்கும் திரைப்படம் வீரமே வாகை சூடும். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ப சரவணன் இயக்கி முடித்துள்ளார்.
இந்நிலையில் விஷாலின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இந்த படத்தை விஷாலின் நண்பர்களான நந்தா மற்றும் ரமணா ஆகியோர் தயாரித்து வருகின்றனர். இந்த படத்தின் நாயகியாக சுனைனா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்பே காணாமல் போன சுனைனாவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.