வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 8 மார்ச் 2020 (20:22 IST)

'மாஸ்டர்' ஆடியோ விழா இப்படித்தான் இருக்கும்: மாஸ் வீடியோ

'மாஸ்டர்' ஆடியோ விழா இப்படித்தான் இருக்கும்
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்திற்கான டப்பிங் பணியை விஜய் முடித்துவிட்டதாக கூறப்படுகிறது. விஜய்சேதுபதி உள்பட மற்ற நடிகர், நடிகைகளின் டப்பிங் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன.
 
இந்த நிலையில் 'மாஸ்டர்' படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 15ஆம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் இந்த விழாவை நேரடியாக ஒளிபரப்ப சன்டிவி ஏற்பாடு செய்துள்ளது. உலகம் முழுவதும் நேரடியாக ஒளிபரப்பப்படும் இந்த இசை வெளியீட்டு விழாவை கோடிக்கணக்கான ரசிகர்கள் தங்களது தொலைகாட்சிகளில் பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் மாஸ்டர் இசை வெளியீட்டு விழா குறித்த ட்ரெய்லர் ஒன்றை  சன் டிவி வெளியிட்டுள்ளது. பார்க்கவே மாஸாக இருக்கும் இந்த ட்ரெய்லர் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை திரைப்படத்திற்கு தான் டிரைலர்கள் வெளியிட்டது உண்டு. ஆனால் முதல் முறையாக ஒரு இசை வெளியீட்டு விழாவுக்கு ட்ரைலர் வெளியிட்டது இதுதான் உலக திரைப்பட வரலாற்றில் முதல் முறை என்று கூறப்படுகிறது