புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 8 மார்ச் 2020 (08:11 IST)

மாஸ்டர் இசை வெளியீட்டுக்கு ரசிகர்கள் அனுமதி இல்லை – ஆனாலும் ஒரு குட் நியுஸ் !

விஜய்

மாஸ்டர் படத்தின் இசைவெளியீட்டு விழாவை சன் டிவி நேரடியாக ஒளிபரப்ப இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் "மாஸ்டர்’ படத்தில் நடித்து வருகிறார். கல்லூரி பேராசிரியராக விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். மாணவராக சாந்தனு பாக்யராஜும் வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர்.

மேலும் ஆன்ட்ரியா, 96 புகழ் கௌரி கிஷன் உள்ளிட்ட சிலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இப்படத்தின் முதல் மூன்று போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதையடுத்து மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான குட்டி கதை சிங்கிள் பாடல் தற்போது வரை 27 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது வருகிறார்.

இப்படத்தின் ஆடியோ ரிலிஸ் விழா மார்ச் 15 ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ரசிகர்களுக்கு விழாவில் அனுமதி இல்லை என சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம் பிகில் ஆடியோ ரிலீஸின் போது ரசிகர்கள் பலர் அதிக விலைக்கு டிக்கெட் வாங்கிவிட்டு அரங்கிற்குள் அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டது சர்ச்சைகளைக் கிளப்பியதே. ஆனால் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தியாக இசை வெளியீட்டு விழாவை அப்படியே லைவ்வாக சன் டிவி ஒளிபரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.