டாக்டர் ஓடிடி ரிலீஸ்… சிக்கலில் சிவகார்த்திகேயன்!
டாக்டர் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்யும் முடிவில் சிவகார்த்திகேயன் இருப்பதாக சொல்லப்படுகிறது.
சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் மார்ச் 26 ஆம் தேதி ரிலீஸாக இருந்த நிலையில் தேர்தல் காரணமாக ரம்ஜான் பண்டிகையான மே 14 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது கொரோனா காரணமாக திரையரங்குகளில் 50 சதவீத இருக்கை அனுமதி, இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு எனப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் டாக்டர் திரைப்படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்வது மிகப்பெரிய சிக்கலாகியுள்ளது. அதனால் ஓடிடி ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் ஒரு மிகப்பெரிய தொகையை கொடுப்பதாக சொல்லும் ஓடிடி நிறுவனம், படத்தின் சேட்டிலைட் உரிமையையும் சேர்த்தே கேட்டுள்ளதாம். ஆனால் படம் ஆரம்பித்த போதே அதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றி விட்டதாம். இப்போது திரும்ப கேட்டால் அவர்கள் கொடுக்க மாட்டோம் என உறுதியாக சொல்லிவிட்டனாராம். இதனால் சிவகார்த்திகேயனுக்கு ஒரு நல்ல ஆஃபர் கைவிட்டு போகும் அதிருப்தியில் உள்ளாராம்.