நலன் குமாரசாமி திரைக்கதை… சுதா கொங்கரா இயக்கம் – கதாநாயகன் இவர்தான்!

Last Modified செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (10:33 IST)

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா மீண்டும் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நீண்ட நாட்களுக்கு பிறகு சூர்யாவுக்கு ஒரு வெற்றிப்படமாக அமைந்தது சூரரைப் போற்று திரைப்படம். இப்போது பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்த படத்தின் வெற்றி மூலம் கவனம் பெற்ற சுதா கொங்கரா, விஜய் அஜித் ஆகியோர்களுக்கு கதை சொல்லியுள்ளார்.

இந்நிலையில் இப்போது அவரின் அடுத்த படத்துக்கான வேலைகளில் இறங்கியுள்ளார். இந்த படத்துக்கு இயக்குனர் நலன் குமாரசாமி திரைக்கதை எழுத, சூர்யாவே கதாநாயகனாக நடிக்க உள்ளாராம். இந்த படம் ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :