செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 27 டிசம்பர் 2019 (18:50 IST)

மனநல மருத்துவரிடம் சிகிச்சை எடுத்து வருகிறேன்… தற்கொலை செய்துகொள்ள மாட்டேன் – இன்ஸ்டாகிராமில் பாடகி சுசித்ரா !

காணாமல் போய்விட்டதாக அவரது சகோதரியால் புகார் கொடுக்கப்பட்ட பாடகி சுசித்ரா தான் நலமாக இருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமா நடிகர் நடிகைகள் பற்றி அந்தரங்க வீடியோக்களை சுச்சிலீக்ஸ் என்ற டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு சர்ச்சையைக் கிளப்பியவர் பாடகி சுசித்ரா. ஆனால் அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது கணவர் கார்த்திக் கூறினார்.

இந்நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் சுசித்ரா, தனது கணவர் கார்த்திக்கை விவாகரத்து செய்துவிட்டு அக்காவோடு வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 3 தினங்களுக்கு,தனது பாதுகாப்பிலிருந்த சுசித்ராவைக் காணவில்லை என்று அவரது சகோதரி போலீஸில் புகார் கொடுக்கவே, விசாரணையில் அவரை சென்னையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுசித்ரா தெரிவித்துள்ள கருத்தில்  ‘நான் தொலைந்து போகவோ, தற்கொலைக்கு முயலவோ இல்லை. என் அக்கா கூறியிருப்பதுபோல் ஒன்றும் இல்லை. நான் பார்க் ஷெரடன் ஓட்டலில் இருந்ததை அறிந்து வந்து அழைத்துப் போனார்கள். ஒரு மன நல மருத்துவரிடம் (கீழ்ப்பாக்கத்தில் அல்ல) சிகிச்சை பெற்று வருகிறேன். நான் நலமாக இருப்பதாகவே கூறுகிறார். சீக்கிரம் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவேன். மறுபடியும் சொல்கிறேன்.நான் தற்கொலை செய்துகொள்ளவோ அல்லது மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்கவே மாட்டேன்.’ எனத் தெரிவித்துள்ளார்.