ஈஸ்வரன் படத்தில் இசையமைப்புப் பணிகள் முடிந்துவிட்டன – தமன் அறிவிப்பு!
நடிகர் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படத்துக்கான இசையமைப்புப் பணிகள் எல்லாம் முடிவடைந்து விட்டதாக இசையமைப்பாளர் தமன் தெரிவித்துள்ளார்.
சிம்பு, நிதி அகர்வால், பாரதிராஜா மற்றும் பலர் நடித்துள்ள ஈஸவரன் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே கட்டமாக முடிந்து இப்போது பின் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தை பொங்கல் பண்டிகைக்கு எப்படியாவது ரிலீஸ் செய்ய வேண்டும் என்று படக்குழு தீவிரமாக உழைத்து வருகிறது. இந்த படத்தை இயக்குனர் சுசீந்தர்ன் 26 நாட்களில் படமாக்கி முடித்துள்ளார்.
இந்நிலையில் ஈஸ்வரன் படத்துக்கான இசையமைப்புப் பணிகள் எல்லாம் முடிந்துள்ளதாக அந்த படத்தின் இசையமைப்பாளர் எஸ் எஸ் தமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நம்பி வாய்ப்பளித்த எஸ்டிஆருக்கும் ஆதரவு அளித்த ரசிகர்களுக்கும் நன்றி. பிஸ்னஸ் மேன் படத்துக்குப் பின்னர் நான் சீக்கிரமாக முடித்த படம் ஈஸ்வரன்தான் எனக் கூறியுள்ளார்.