மாவீரன் புகழ் ராம்சரணுக்கு கொரோனா உறுதி! – ரசிகர்கள் அதிர்ச்சி!
தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான ராம்சரணுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக அறியப்படுவர் ராம்சரண். தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகனான ராம்சரண், ராஜமௌலி இயக்கத்தில் வெளியான மகதீரா படத்தின் மூலம் பிரபலமானார். தற்போது ராஜமௌலியின் மற்றொரு படமான ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் உடல் சோர்வு ஏற்பட்டதால் கொரோனா சோதனை செய்துகொண்ட ராம்சரணுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார்.