1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 15 அக்டோபர் 2019 (08:33 IST)

விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தில் ‘கே.ஜி.எஃப்’ நாயகி!

சியான் விக்ரம் நடிக்கும் அடுத்த திரைப்படமான ’விக்ரம் 58’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் இணைந்துள்ள செய்தியை நேற்று படக்குழுவினர் வெளியிட்டனர். இதனையடுத்து இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது 
 
மேலும் பொதுவாக கிரிக்கெட் வீரர்கள் திரைப்படங்களில் நடித்தால் ஓரிரு காட்சிகளில் மட்டும் நடிப்பது வழக்கமாக இருந்தது. ஆனால் இர்பான் பதான் இந்த படத்தில் விக்ரமுடன் படம் முழுவதும் டிராவல் செய்யும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிப்பதாகவும் இதனால் இந்த படம் முக்கியத்துவம் பெற்றதாகவும் கூறப்படுகிறது 
 
மேலும் இந்த படத்தில் விக்ரம் ஜோடியாக இரண்டு நாயகிகள் நடிக்க உள்ளதாகவும், அதில் ஒருவர் ‘கே.ஜி.எஃப்’ படத்தின் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இன்னொரு நடிகை தமிழின் முன்னணி நடிகைகளில் ஒருவர் என்றும், இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது 
 
‘விக்ரம் 58’ படத்தில் விக்ரம் சுமார் 15 கெட்டப்புகளில் நடிக்கவிருக்கின்றார் என்பதும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது