செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 28 ஏப்ரல் 2024 (08:15 IST)

விஜய்யின் கோட் படத்தில் நடனமாட மறுத்த பிரபல தெலுங்கு நடிகை… காரணம் அஜித் படமா?

அரசியல் வருகையை அறிவித்துள்ள விஜய் தற்போது  GOAT படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் பெரும்பகுதி நிறைவடைந்துள்ள நிலையில் இறுதிகட்ட ஷூட்டிங்குக்காக ரஷ்யாவுக்கு சென்றுள்ளது.  இந்த படம் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த மாதத்தில் கோட் படத்தின் முதல் சிங்கிள் பாடலான விசில் போடு என்ற பாடல் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த பாடல் பெரும்பாலான விஜய் ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை.

இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சி இப்போது படமாக்கப்பட்டு வருகிறதாம். இந்த பாடலில் விஜய்யோடு இணைந்து திரிஷா நடனமாட உள்ளதாக சொல்லப்படுகிறது. முதலில் இந்த பாடலில் ஆட தெலுங்கு நடிகையான ஸ்ரீலீலாவைதான் படக்குழு அணுகியுள்ளது. ஆனால் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் நாயகியாக நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதால் தமிழில் அறிமுகம் ஒரு கதாநாயகியாக இருக்கட்டும் என முடிவு செய்து விஜய் பட வாய்ப்பை அவர் நிராகரித்துவிட்டாராம்.