வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (16:41 IST)

எஸ் பி பிக்கு மத்திய அரசு செய்த கௌரவம்… இதுவரை வாங்கிய விருதுகள்!

மறைந்த எஸ் பி பாலசுப்ரமண்யம் வாங்கியுள்ள விருதுகள் பட்டியலின் தொகுப்பு.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு இரண்டு மாதங்களாக சிகிச்சை எடுத்து வந்த எஸ் பி பாலசுப்ரமண்யம், இன்று பிற்பகல் 1 மணிக்கு காலமானார். அவரின் மறைவு இந்தியா முழுவதும் உள்ள இசை ரசிகர்களை மாபெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை 15 மொழிகளுக்கு மேல் 45,000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ள அவருக்கு ஒன்றிய அரசு வழங்கியுள்ள விருதுகளின் பட்டியல்.

தேசிய விருது :-
1. சங்கராபரணம் - தெலுங்கு - 1980 ஆம் ஆண்டு
2. ஏக் துஜே கேலியே - இந்தி - 1981 ஆம் ஆண்டு
3. சாகார சங்கமம் - தெலுங்கு - 1983 ஆம் ஆண்டு
4. ருத்ரவீணா - தெலுங்கு - 1988 ஆம் ஆண்டு
5. சங்கீத சாகரா கணயோகி பஞ்சக்ஷரா காவாய் - கன்னடா - 1995 ஆம் ஆண்டு
6. மின்சார கனவு - தமிழ் - 1999 ஆம் ஆண்டு
7. பத்மஸ்ரீ விருது - 2001-ஆம் ஆண்டு
8. பத்ம பூஷன் - 2011-ஆம் ஆண்டு

இவைகள் இல்லாமல் தமிழ்நாடு மற்றும் ஆந்திர அரசுகளின் விருதுகள் பலவற்றையும் அவர் வென்றுள்ளார்.