படுக்கைக்கு அழைத்த நபர் - முகத்திரையை கிழித்த மாஸ்டர் நடிகை!
திரைத்துறையில் நடிகைகளிடம் சில நெட்டிசன்ஸ் தகாத முறையில் நடத்துக்கொள்வதெல்லாம் மாதத்திற்கு ஒரு கேஸ் என பார்க்கமுடிகிறது. அதை ஒரு சிலர் பொருட்படுத்தாமல் இருந்தாலும் சில நடிகைகள் வெளுத்து வாங்கிவிடுவார்கள்.
அந்தவகையில் தற்போது yours shamefully என்கிற குறும்படத்தில் தைரியான ரோலில் நடித்து புகழ்பெற்றவர் சௌந்தர்யா. மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டு பிரபலமானார்.
அதோடு விஜய்யின் மாஸ்டர் படத்தில் பேராசிரியர் ரோலில் நடித்திருந்தார். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நபர் ஒருவர் தன்னை தகாத வார்த்தைகளை கூறி படுக்கைக்கு அழைத்ததை ஸ்க்ரீன் ஷாட்டுடன் பதிவிட்டு அந்த நபரின் முத்திரையை கிழித்துவிட்டார்.