செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 21 ஜூன் 2021 (15:22 IST)

நேரடி திரைப்பட தயாரிப்பில் இறங்கும்சோனி லைவ்… முதல் பட கதாநாயகனாக சூர்யா!

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாக உள்ள திரைப்படத்தை சோனி லைவ் தயாரிக்க உள்ளதாம்.

கொரோனா கால கட்டுப்பாடுகள் திரையரங்குகளை முடக்கியுள்ள நிலையில் ஓடிடிகளின் பெருக்கம் அதிகமாகியுள்ளது. ஏற்கனவே தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஜி 5 மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸார் ஆகிய ஓடிடி தளங்கள் செல்வாக்கை செலுத்தி வருகின்றன. இந்நிலையில் இப்போது சோனி லைவ் என்ற புதிய தமிழ் ஓடிடி அறிமுகமாக உள்ளது.

ஏற்கனவே இந்தியில் முன்னணி ஓடிடி நிறுவனமாக இருக்கும் சோனி லைவ் இப்போது தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கிறது. ஜூன் 25 ஆம் தேதி முதல் இந்த ஓடிடி செயல்பட தொடங்க உள்ளது. முதல் படமாக விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்ற தேன் திரைப்படம் வெளியாக உள்ளது. அதன் பின்னர் நரகாசூரன், கடைசி விவசாயி உள்ளிட்ட பல படங்கள் வரிசையாக வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஓடிடி மட்டும் இல்லாது இப்போது திரைப்பட தயாரிப்பிலும் இறங்க முன்வந்துள்ளதாம். முதல் படமாக சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் படத்தைக் கைப்பற்றியுள்ளதாம். இந்த படத்தை முதலில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. இந்நிலையில் இப்போது அதற்கான பைனான்ஸ் செய்து அந்த படத்தைக் கைப்பற்ற உள்ளதாம். படம் உருவாகி ரிலீஸாகும் போது திரையரங்க வெளியீடா அல்லது ஓடிடி வெளியீடா என்பது முடிவு செய்யப்படுமாம்.