திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 5 அக்டோபர் 2021 (12:19 IST)

அஜித் வீடு முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்! – ட்ரெண்டாகும் வாழ விடுங்க அஜித்!

நடிகர் அஜித் வீடு முன்பாக இளம்பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று நடிகர் அஜித் வீடு முன்பாக இளம்பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக அந்த பெண்ணை தடுத்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அதன்பேரில் அங்கு விரைந்த போலீஸார் இளம்பெண்ணை கைது செய்து விசாரித்துள்ளனர்.

விசாரணையில் அந்த பெண் பெயர் ஃபர்ஸானா என்பதும் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. சில நாட்கள் முன்னதாக தனியார் மருத்துவமனைக்கு அஜித் சென்றிருந்தபோது அவருடன் இந்த பெண் செல்பி எடுத்ததால் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அந்த மன விரக்தி காரணமாக இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் பலர் #வாழவிடுங்க_அஜித் என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.