வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 6 நவம்பர் 2020 (10:00 IST)

இந்த வார பெஸ்ட் பெர்மார்மர் ஆரி, சம்யுக்தா அடைந்த ஆத்திரம்

இந்த வார பெஸ்ட் பெர்மார்மர் ஆரி, சம்யுக்தா அடைந்த ஆத்திரம்
பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் அந்த வாரத்தின் சிறப்பாக செயல்பட்டவர் மற்றும் மோசமாக செயல்பட்டவர் குறித்த கருத்துகணிப்பு எடுக்கப்படும் என்பது தெரிந்தது
 
அந்த வகையில் இந்த வாரம் சிறப்பாக செயல்பட்டவர் என்று கிட்டத்தட்ட சோமசேகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆரி, அர்ச்சனா, நிஷா, பாலாஜி உள்பட பலரும் சோமசேகர் தான் சிறப்பாக செயல்பட்டவர் என்று தேர்வு செய்தனர். இதனால் அவர் அடுத்த வார கேப்டனாகிவிடுவார் என தெரிகிறது. ஆனால் அதே நேரத்தில் அப்படி சோமசேகர் என்னதான் செய்துவிட்டார் என்று பார்வையாளர்களுக்கு புரியாத புதிராக இருப்பது உள்ளது 
 
குறிப்பாக சேகர் கேப்டனாக வரக்கூடாது என்று சம்யுக்தாவுக்கு உதவி செய்த பாலாஜியும் சோம்சேகரை தேர்வு செய்யப்பட்டிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இது எதனால் என சம்யுக்தா பாலாஜியிடம் கேள்வி கேட்க அதற்கு ’நான் தான் எல்லோராலும் கார்னர் செய்ய படுகிறேன்’ என்று விரக்தியாக பாலாஜி பதிலளித்தார்
 
இந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் சிறப்பாக செயல்பட்டவர் இன்னொருவர் யார் என்ற தேர்வில் சனம், அனிதா, ஆஜித், ரமேஷ் ஆகியோர் ஆரியை தேர்வு செய்தனர். கடந்த இரண்டு வாரங்களாக ஆரியை மோசமான போட்டியாளர் என தேர்வு செய்து சிறைக்கு அனுப்பி வைத்த நிலையில் இம்முறை அவர் சிறப்பாக செயல்பட்டவர் என தேர்வு செய்யப்பட்டதை அறிந்து சம்யுக்தா ஆத்திரம் அடைவது போல் உள்ளது. மேலும் இந்த வாரம் சம்யுக்தா மற்றும் ஆரி இடையே கடுமையான பிரச்சனை நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.