திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 21 ஜூலை 2023 (09:16 IST)

விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறேன்.. மேடையில் பேசிய சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் நடிப்பில்  வெளியாகியுள்ள மாவீரன் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இந்த படம் நல்ல வசூலைப் பெற்று வருகிறது. வெளியாகி ஒரு வாரத்தில் 50 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் பாதி எல்லோருக்கும் பிடித்திருப்பதாகவும், ஆனால் இரண்டாம் பாதியில் சொதப்பி இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்துகள் வந்துள்ளன.

இந்நிலையில் நேற்று இந்த படத்தின் சக்ஸஸ் மீட் சென்னையில் நடந்தது. அப்போது பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், படத்தில் அசரீரி குரலுக்கு டப்பிங் கொடுத்த விஜய் சேதுபதிக்கு நன்றி தெரிவித்தார். மேலும் பேசிய அவர் “விஜய் சேதுபதியோடு ஒரு படத்தில் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறேன். விரைவிலேயே அது நடக்கும் என எதிர்பார்க்கிறேன்” எனப் பேசினார்.

விஜய் சேதுபதியும் சிவகார்த்திகேயனும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் சினிமாவில் அறிமுகமானவர்கள். இருவரும் போட்டியாளர்களாக கருதப்பட்டாலும் நண்பர்களாகவே அவர்கள் பழகி வருகின்றனர்.