டாக்டர் படத்தில் எனக்கு வசனமே இல்லை… சிவகார்த்திகேயன் வருத்தம்!
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் வரும் சனிக்கிழமை வெளியாக உள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் ஒரு ஆண்டு கால தாமதத்துக்குப் பின்னர் இப்போது வெளியாக உள்ளது. அந்த தேதியில் ஆயுத பூஜை விடுமுறை வருவதாலும், போட்டிக்கு எந்த படங்களும் இல்லாததாலும் அனைத்து ஏரியாக்களிலும் படம் மிகப்பெரிய தொகைக்கு விலைபோயுள்ளதாம்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனோடு பிரியங்கா அருள் மோகனன், யோகி பாபு, வினய் உள்ளிட்ட பலர் நடிக்க நெல்சன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய சிவகார்த்திகேயன் படத்தில் எல்லோரும் பேசிக்கொண்டு இருக்கும் போது நான் மட்டும் அமைதியாக இருப்பேன். படத்தில் எனக்கு வசனமே இல்லை. என்னை எப்படி இந்த கதாபாத்திரத்தில் நெல்சன் யோசித்தார் என தெரியவில்லை எனக் கூறியுள்ளார்.