சிவகார்த்திகேயனை அறிமுகப்படுத்தியது லட்சுமி ராமகிருஷ்ணன் தானா - வெளியான வீடியோ!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி நடத்தி பெரும் பிரபலமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். அந்த நிகழ்ச்சியில் பலரது குடும்ப பிரச்னைகளை தீர்த்து வைத்து பஞ்சாயத்து நடத்துவார். இது பல குடும்பங்களை ஈர்த்தது.
மேலும் இந்த நிகழ்ச்சியை கலாய்த்து டிக்டாக் வீடியோ, மீம்ஸ் உள்ளிட்டவை வெளியாகி செம ட்ரெண்ட் ஆனது. பின்னர் அந்த நிகழ்ச்சி தனி மனித உரிமையில் தலையிடுவதுபோல் உள்ளது என்றும் இதனால், கடந்த 2016ல் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறி இந்த நிகழ்ச்சி ஒளிப்பரப்ப தடை விதித்தனர்.
இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய லட்சுமி ராமகிருஷ்ணன் தான் நடிகர் சிவகார்த்திகேயனை சினிமாவில் முதன்முறையாக அறிமுகப்படுத்துவதாக இருந்தாராம். ஆனால், அவரது இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்த "குரல்" என்ற அந்த குறும்படம் கைவிடப்பட்டதால் அவர் மெரினா நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்று பல வருடங்கள் கழித்து லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுவரை வெளிவராத இந்த தகவல் பலரையும் வியப்பிற்குள்ளாகியுள்ளது.