வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 2 ஏப்ரல் 2020 (19:59 IST)

சிவகார்த்திகேயன் பட வசனத்தை டுவிட்டரில் பதிவு செய்த திருப்பூர் கலெக்டர்

சிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கிய 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் ஒரு வசனம் பலரையும் கவர்ந்திருக்கும்
 
நீ யாரா வேணும்னா இரு 
எவனா வேணும்னா இரு ; ஆனா
என்கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளியே இரு 
 
மேற்குறிப்பிட்ட இந்த வசனம் அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்த நிலையில் இந்த வசனம் தற்போதைய சூழ்நிலைக்கு மிகப் பொருத்தமாக இருப்பதை அடுத்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜய கார்த்திகேயன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை குறிப்பிட்டு அனைவரும் கொஞ்சம் தள்ளியே இருங்கள் என்று தெரிவித்துள்ளார் 
 
இந்த ட்வீட்டை பார்த்த சிவகார்த்திகேயன் தனது படத்தின் வசனத்தை ஞாபகப்படுத்தியதற்கு நன்றி என்றும் இந்த வசனம் மிகப் பொருத்தமாக தற்போதைய சூழ்நிலைக்கு இருப்பதாகவும் இந்த வசனத்தை எழுதிய இயக்குனர் பொன்ராம் அவர்களுக்கே இந்த புகழ் போய் சேரும் என்று கூறியுள்ளார்.
 
தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் மிகவும் பரபரப்புடன் இருந்து வரும் நிலையில் சரியான வசனத்தை தனது டுவிட்டரில் பதிவு செய்து மக்களுக்கு விழிப்புணர்வு செய்த திருப்பூர் கலெக்டருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது