செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (13:35 IST)

கிராமத்தில் வீடு கட்டி குடியேறிய சிவகார்த்திகேயன்… வைரல் புகைப்படங்கள்!

நடிகர் சிவகார்த்திகேயனின் வீட்டு புதுமனைப் புகுவிழா சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிவகார்த்திகேயன். அவர் நடிப்பில் அடுத்து டான் திரைப்படம் மே 13 ஆம் தேதி வெளியாக உள்ளது. அயலான் உள்ளிட்ட சில படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக உள்ளன.

இந்நிலையில் தற்போது அவர் சொந்த ஊரான நன்னிலம் திருவீழிமிழலையில் புதிதாக வீடு கட்டி இன்று குடிபெயர்ந்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இன்று இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன. இந்த நிகழ்ச்சியில் அருவி மற்றும் வாழ் படங்களின் இயக்குனரும் சிவகார்த்திகேயனின் சகோதரருமான அருண் பிரபு புருஷோத்தமனும் கலந்துகொண்டுள்ளார்.