'கனா' ரிலீஸ் தேதி அறிவிப்பு: அதிர்ச்சியில் தனுஷ் தரப்பு
ஒருசில ஆண்டுகளுக்கு முன் தனுஷூம் சிவகார்த்திகேயனும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். '3' படத்தில் தனுஷூக்கு நண்பராக நடித்த சிவகார்த்திகேயன், தனுஷ் தயாரித்த 'எதிர்நீச்சல்', 'காக்கி சட்டை' போன்ற படங்களிலும் நடித்தார்.
இந்த நிலையில் திடீரென இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் அதன்பின் பொதுநிகழ்ச்சியில் சந்தித்தால்கூட இருவரும் பேசிக்கொள்வதில்லை.
இந்த நிலையில் இன்று காலை தனுஷ் தனது 'மாரி 2' திரைப்படம் டிசம்பர் 21ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளிவந்த ஒருசில மணி நேரங்களில் சிவகார்த்திகேயன் தனது 'கனா' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். 'கனா' திரைப்படமும் அதே டிசம்பர் 21ஆம் தேதிதான் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே விஜய்சேதுபதியின் 'சீதக்காதி' மற்றும் ஜெயம் ரவியின் 'அடங்கமறு' திரைப்படங்கள் வெளிவருவதால் 'மாரி 2' திரைப்படத்திற்கு தியேட்டர் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது 'கனாவும் இந்த போட்டியில் கலந்து கொண்டதால் தனுஷ் தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது