சாந்தி திரையரங்கு சொத்துக்களை விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும்: சிவாஜி மகள்கள் புதிய மனு
சாந்தி தியேட்டர் வளாகத்தை விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும் என சிவாஜி கணேசனின் மகள்கள் புதிய மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிவாஜி கணேசனின் மகள்கள் சாந்தி மற்றும் ராஜ்வி ஆகிய இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் சொத்துக்கள் குறித்த வழக்கு தாக்கல் செய்தனர்
அதில் நகை உள்பட பல சொத்துக்கள் தங்களுக்கு பிரித்து தரப்படவில்லை என்று கூறப்பட்டிருந்தது
இந்த நிலையில் தற்போது சாந்தி திரையரங்கு வளாகத்தை விற்பனை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என புதிய மனுக்களை சிவாஜி கணேசன் மகள்கள் தாக்கல் செய்துள்ளனர்
இந்த வழக்கு இன்று விசாரணை செய்யப்பட்டதை அடுத்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சிவாஜி மகள்கள் தாக்கல் செய்த பிரதான வழக்கின் விசாரணையும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது