1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 5 ஜூன் 2022 (09:07 IST)

உலகமே பொறாமையுடன் பார்க்கும் திறமைசாலிகள் சிவாஜி-கமல்: பிரபல தயாரிப்பாளர்!

sivaji kamal
உலகமே பொறாமையுடன் பார்க்கும் திறமைசாலிகள் சிவாஜி-கமல்: பிரபல தயாரிப்பாளர்!
உலகமே பொறாமையுடன் பார்க்கும் திறமைசாலிகள் சிவாஜி-கமல் என பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
உலகம் பொறாமையுடன் திரும்பிப் பார்க்கும் திறமைசாலிகளைத் தமிழ்த் திரையுலகம் கொண்டிருப்பது நாமெல்லாம் பெருமைகொள்ளலாம். 
 
எப்போதும்,  ஐயா சிவாஜி, இப்போது உலக நாயகன். உலகின் தலைசிறந்த கலைஞர்களில் முதல் வரிசையில் அமர்ந்திருப்பவர்கள். அப்படி அமர்ந்திருப்பதற்கு காரணம் "அர்ப்பணிப்பு" என்ற பெரும் உழைப்பைக் கையில் வைத்திருந்ததால்தான். 
 
இத்தனை ஆண்டுகள் கடந்தும் தன்னை அர்ப்பணிக்கும் உணர்வை விட்டுத் தரவில்லை உலக நாயகன் கமல்ஹாசன். தன்னை இந்த சினிமாவில் தனித்துவப் படுத்திக் கொண்டே இருக்கிறார்.  விக்ரம் படத்திலும் அவரது தனித்துவம் மின்னுகிறது. 
 
பெருமைகொள்ள வைக்கும் நாயகனின் விக்ரம் பல மைல் கல்களைத் தாண்டி மக்களை மகிழ்விக்கும். ஒரு இரசிகனாக வாழ்த்தி மகிழ்கிறேன். படம் பார்க்காதவர்கள் திரையரங்கம் வந்து பாருங்கள். வாழ்த்துக்கள் லோகேஷ் கனகராஜ்’ என தெரிவித்துள்ளார்.