புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 3 ஜூன் 2022 (11:10 IST)

அடுத்தடுத்து நான்கு படங்கள்… எல்லாம் சாத்தியமானது எப்படி? அனிருத் நெகிழ்ச்சி கடிதம்!

இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ள விக்ரம் திரைப்படம் இன்று ரிலீஸாகியுள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து ஜூன் தொடக்கம் வரை அனிருத் இசையமைப்பில் நான்கு படங்கள் ரிலீஸாகியுள்ள்ளன. இவையனைத்துமே முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் இடம்பெற்ற படங்கள். பீஸ்ட் , காத்து வாக்குல ரெண்டு காதல், டான் ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது விக்ரம் திரைப்படம் ரிலீஸாகியுள்ளது.

இந்நிலையில் அனிருத் தற்போது தனது ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ஏப்ரல் 13 முதல் ஜூன் 3 வரை, என்னிடம் நான்கு படங்களின் ரிலீஸ் காத்திருந்தது. பீஸ்ட்டில் தொடங்கி, காத்து வாக்குல ரெண்டு காதல், டான் மற்றும் விக்ரம் வரை. என் இசை மீதான உங்கள் பேரன்புதான் இதை சாத்தியமாக்கியது. எங்கள் குழுவின் இசைக்கலைஞர்கள் இல்லாமல் இது நடந்திருக்காது. எங்களைப் போலவே விக்ரம் திரைப்படத்தை நீங்களும் ரசிப்பீர்கள் என நம்புகிறோம்.” என்று கூறியுள்ளார்.